' பேசாமல் பேசும் மொழி '
துடிக்கிற வார்த்தை எல்லாம் தவிக்குது நாவிர்க்குள்ளே மௌனத்தின் மொழியாய் என்றும் செய்கையின் வழி தான் தோன்றும் மொழிக்கொரு ஓவியம் தீட்டும் அதை அசைகின்ற விரல்கள் காட்டும் வேடிக்கைத் தனமாய் திகழும் இயலாமையால் மனமும் இகழும் விரல் பேசா நேரப் பொழுதில் விழியும் மொழியாகும் எளிதில் தேடி திரிந்து வேண்டும் அமைதி கூடி புதைந்து ஓடி ஒழிந்த மௌனத்தின் நியதி