Posts

Showing posts from August, 2020

வர்க்கச் சாதி

பணக்காரர் எல்லாம்  ஏழ்மை கடந்து எழுந்தவர் தான்  ஏழை என்பார் அவர்  ஏழ்மையிலும் எளியவரே. ஏழ்மை எனும் தாய் மரமிடையே பிரியும் கிளையாம் வர்க்கங்கள்  வர்க்கங்கள் இங் கிரண்டல்ல முயற்சிக்கு இது தடையல்ல. ஏழ்மையில் தாழ்மை கொடிதாகின் தாழ்மையில் கீழ்மையின்மை உயர்வாகும் பணக் காகிதத்தின் அரசாட்சியினால் சாதிகளும் செத்து மடிந்துவிடும். சாதியின்  தோற்றம் இயற்கை எனில் ஆதியில் பிறந்தவன் எந்தச் சாதியினன் ? இருந்தும் இத்தனை சாதிகள் இருப்பது ஏன்? குரங்கில் தோன்றிய மனித இனம்  சாதிக்குள்ளே குறுக்குவதேன்.