மறு பிறப்பு
ஆசை தூண்டும் இவ்வுலகில் - நான் மீண்டும் பிறக்க வேண்டுவேன் மரனம் தீண்டும் வேளையில் - என் இதயமெடுத்து பிறப்பின் விதி இயற்றி மாயுவேன். காதலர்கள் மத்தியில் காதலாக மாறுவேன் மனிதனாக பிறந்திடில் பாலிரண்டாய் மாறுவேன் என்னை நான் காதலித்து உலகிலுள்ள அழகினை என் அன்பினாலே ஆளுவேன். மரமாக மாறிடில் விழுதாகி வீழுவேன் மணலோடு மாலையிட்டு மீண்டும் மரமாகுவேன் வேராக நான் நின்று கிளையின் இலையாகி நிழலோடு மழை தந்து நிலையாக வாழுவேன். பறவை மிருகமு மாகிடுவேன் பறந்த உலகினில் வாழ்ந்திடுவேன் இறந்த வாழ்வை எண்ணாமல் இயற்கையின் இதயமாய் பிறந்திடுவேன்.