Posts

Showing posts from March, 2021

மரணத்தால் மறுவாழ்வு

மரணம் இல்லா பெரு வாழ்வு  மரணம் காணும் இவ்வாழ்வில் . இமைக்கா விழியே ஆனாலும்  இறப்பில் இமைத்தே தான் தீரும். நித்தம் இரத்தம் சுத்தம் செய்யும் - இதயம்  மரணத் தோடு  மட்டும்தான் யுத்தம் செய்யும். இமைகள் இறுதியில் மூடிவிடும்  இதயமும் துடிக்க மறந்து விடும். தசைகள் சுருக்கம் கண்டுவிடும் பசைகளற்று வறட்சியாகிவிட. மடிந்தவுடன் மனித உடல்  மண்ணுக்கும் நெருப்புக்கும் பசியாற்ற பறந்துவிடும். நினைத்தால் இதயம் இடம் மாறும்  நினைத்தால் விழியும் புதிதாய் நிறம் காணும். இருந்து வீனாய் போகும் உடல் இறப்பில் தானத் தின் வழி வாழ்ந்திடட்டும்.