நாடு படும் பாடு
யுகத்தில் விளம்பர மோகத்தில் ஆசைகளுக்கு அடிமையானதால் நாடு படுகிறது பெரும் பாடு. பயிற்சிகள் அற்று போனதால் முயற்சி முற்று பெற்றதால் தோல்வியை தாண்டும் எண்ணம் இல்லாததால் நாடு படுகிறது பெரும் பாடு அன்று கல்லாமையால் கற்பை பற்றி பேசிப்பேசி பெண்மையை இழிவு படுத்திட இன்று கற்றவனே கற்பிற்கு கலங்கம் தருவதனால் இந்நாடு படுகிறது பெரும் பாடு. உழைத்து பிழைக்க வழி இருந்தும் பதவிப் பணத்தின் மோகத்தில் பறித்து பிழைக்கும் உலகத்தால் நாடு படுகிறதுப் பெரும் பாடு . தினமும் பணமும் உயர்வதனால் தலைக்கனமும் தினமும் உயர்வடைய அகந்தை செருக்ககம் புகுந்தோரால் இந்நாடு படுகிறது பெரும் பாடு . இறைவன் உண்டு அதோனோடிணைந்து பகுத்தறிவதும் நன்று இதை சிந்திக்க மறுக்கும் பொது ஜனமே உங்களால் தான் நாடு படுகிறது பெரும் பாடு.