வானம் தாண்டிய உலகு
அழகிய நீல வானம் பறவை தனதுலகாய் அதை ஆளும் மேக தரையில் காலூன்றி வேகமாய் சிறகசைவின்றி நகர்ந்தோடும் உயர பறக்க உணவு கிடைக்குமிட மெதுவோ உணவாக இறைதேடி அலைந்திடுமோ இல்லை உணர்வாக இறையோடு இயங்கிடுமோ கீழிருக்கும் உயிரினமே கீழாகத் தோன்றிடுமோ பார் பறந்தார் போல பறப்பதற்கு சிறகு சிதையாமல் பார்த்துக்கொள் நீ விரும்பும் உலகு