Posts

Showing posts from September, 2025

இதயத்துடிப்பு

யாரோ படைத்த யாரோ ஒருவரால் யாரோ ஒருவரில் யாரோ ஒருவராய் யாரோ ஒருவருக்கு யாரோ ஒருவரைத் தந்து யாரோ ஒருவராகவே வாழ்ந்து யாருக்கும் உதவாத யாரோ ஒருவராய் உலகைப் பிரிகிறோம்  எனக்கு நீரும்  உமக்கு நானும்  என்றும் யாரோ... இரவிடம் உடலைக் கடன் வாங்கி விண்மீனொளியை உயிராக்கி விளையாடுவேன் மனித வாழ்வில் ரசனை உணர்வாகி  விடையாவேன்  இருளுக்கு அருளும் ஒளியாகி  எதிராவேன் நிலையற்ற நிலவொளிக்கு பகையாகி தேடுகிறேன் ஓடுகிற வேகமதில்  வாடுகிறேன் கூடுகிற மோகமதில்  நாடுகிறேன் நான் வாழும் நலம் தேடி மூடகிறேன் என் வாழ்வை  இயற்கையின் இதயத்துடிப்பாக்கி.