Posts

Showing posts from May, 2018

' மதம் மனிதத்தை அழிக்கும் ஆயுதம் '

மதங்கள் இங்கே பல உண்டு மனிதம் எல்லோரிடத்துண்டு மதக் கொள்கை எனப் பல கொண்டு மத நெறி அன்பு அறத்துக்கு இழுக்குண்டு . நெறிகள் தீமையை எதிர்த்து வெறுக்க சொல்ல மனிதப் பொறிகள் தீண்டாமையினை வளர்க்கிறது மூன்றாம் பால் இனத்தோரையும் - மனிதம் பிறவியில் ஒன்றென மதிக்க மறக்கிறது  . நிலங்களில் வேறுபாடுண்டு நித்தமும் சண்டைகள் இங்கு  உண்டு  . குறிகளில் மட்டும் பிரிவினை இருக்கட்டும் அது இருபால் இனத்தை மட்டும் சுட்டட்டும் மதங்கள் கடந்து மனிதம் சிறக்கட்டும் அன்று மானுடப் புகழிசை விண்ணில் எதிரொலிக்கட்டும்  .