காதல்
அருவியின் சாரலில் அருந்து விழும் நீரிலே ஓவென கத்தவே மலை உச்சியில் அது சுத்தவே ஈர காற்றிலே இனம் புரியாத காதலில் மௌன வார்த்தையும் மனதின் ஆசையும் ராக பாடலும் மோக கூடலும் இதய ஓசையில் உயிரின் நடனமும் வண்ண ஓவியம் ரதியவளின் காவியம் உதிரும் இலைகளோ துளிர்க்க துடிக்குது உடைந்த மனதிலே காதல் மலருதே சிந்தை சிதையுதே மேக பயணிகள் நீல வானிலே நீள வாழுதே வாடகை தந்தே வானவில் வாங்கி மீது ஏறியே மீத காதலை விண்ணி லேறியே வானை சுற்றியே நிலவோடு நித்தம் எங்கள் நினைவை மொத்தமாய் நட்சத்திர வெளியிலே காற்றின் பாடலுக்கு பறவைகள் இசை அமைத்து சூரிய சுடர் தறித்து முயல் செவியும் கயல் விழியும் அணில் உடலும் பட்டாம்பூச்சி படபடப்பும் கை குழந்தை கிளுகிளுப்பும் வளைந்தோடும் ஆற்றின் சலசலப்பும் அமுதிசையாகி அழகூட்டி ஆழி தேரை அலை இழுக்க மேனித் தேர் ரதியுடனே பரியேறி பார் சுற்றி பெரும் தாகத்தாலே தடுமாறி செவ்விதழ் முத்தம் பரிமாறி சேர்ந்து உலாவும் கனாவுலகில் நீயும் நானும் மட்டும் ஓர் உலகில் மெய்யும் மெய்யும் சேர்த்து மெய்யை பொய் ஆக்கிடுவோம் இல்லாத அறமெல்லாம் இல்லறம் என்றாகி என் காதல் உன் க...