காதல்
அருவியின் சாரலில்
அருந்து விழும் நீரிலே
ஓவென கத்தவே
மலை உச்சியில் அது சுத்தவே
ஈர காற்றிலே
இனம் புரியாத காதலில்
மௌன வார்த்தையும்
மனதின் ஆசையும்
ராக பாடலும்
மோக கூடலும்
இதய ஓசையில்
உயிரின் நடனமும்
வண்ண ஓவியம்
ரதியவளின் காவியம்
உதிரும் இலைகளோ
துளிர்க்க துடிக்குது
உடைந்த மனதிலே
காதல் மலருதே
சிந்தை சிதையுதே
மேக பயணிகள்
நீல வானிலே
நீள வாழுதே
வாடகை தந்தே
வானவில் வாங்கி
மீது ஏறியே
மீத காதலை
விண்ணி லேறியே வானை சுற்றியே
நிலவோடு நித்தம்
எங்கள் நினைவை மொத்தமாய்
நட்சத்திர வெளியிலே
காற்றின் பாடலுக்கு
பறவைகள் இசை அமைத்து
சூரிய சுடர் தறித்து
முயல் செவியும்
கயல் விழியும்
அணில் உடலும்
பட்டாம்பூச்சி படபடப்பும்
கை குழந்தை கிளுகிளுப்பும்
வளைந்தோடும் ஆற்றின் சலசலப்பும்
அமுதிசையாகி அழகூட்டி
ஆழி தேரை அலை இழுக்க
மேனித் தேர் ரதியுடனே
பரியேறி பார் சுற்றி
பெரும் தாகத்தாலே தடுமாறி
செவ்விதழ் முத்தம் பரிமாறி
சேர்ந்து உலாவும் கனாவுலகில்
நீயும் நானும் மட்டும் ஓர் உலகில்
மெய்யும் மெய்யும் சேர்த்து
மெய்யை பொய் ஆக்கிடுவோம்
இல்லாத அறமெல்லாம்
இல்லறம் என்றாகி
என் காதல் உன் காதல்
நம் காதல் கடலாகி
முங்கி எழுந்து
முத்து குளிப்போம்
எஞ்சும் காதலை
கொஞ்சி வளர்ப்போம்
எல்லோரும் பேர் ஆமை
பொராமை கொள்ள
விரலுக்கு விரயம் செய்து
கண்ணுக்கு காவல் செய்து
உன் படுகுழி கன்னக்குழி விழுந்து
சிரிப்புக்கு சிலை வைத்து
பற்களுக்கு பரிசு தந்து
அனங்கிடை அங்கமதை
தங்கத்தில் கவசமிட
நாணத்தில் நான் மயங்கி
நாளும் அவளை நான் வணங்கி
அவள் பிறப்பின் சிறப்பாய்
ஏழு பிறப்பும் அறிய
வரலாற்றில் பதிய
நானே என் காதல்
ரதி அவளின் பதியாவேன்.
அடர் காரிருள்
அவள் பேரருள்
தொடு வானாமாய்
தொட நாணமாய்
திங்களும் வீசு தென்றலும்
ஈர செடிகளும்
உயர மரங்களும்
துயரை மறந்து தான்
அயர்வு துறந்து தான்
அருகில் அவளிருக்க
காதல் துணை இருக்க
இதயம் இரண்டு உருக
காதலிக்க கை கோர்போம்
காலமெல்லாம் காதல் வாழ
Comments