Posts

Showing posts from April, 2021

இசையும் இசையே

துளை போட்ட குழலும்  மெல்லிசை தந்து போகும் கனமான மனதின் பெரும் ரணம் தீர்த்து போகும் பறையோடு  பாடல் நம் பண்பாட்டுத் தேடல் துளைத் தோளின் கூடல் இது கலைத் தாயின் ஊடல்.  குயிலின் குரலும்  கடலின் அலையும் அழகிய இசையின்  அழியா தடமே. இமைக்குள் விழி போல் மொழிக்குள் இனிதாய் கவிக்குள் பெரிதாய்  கானம் கலந்திட இசையாகும்  நாளும் களித்திட துணையாகும்.

சிரிப்பு

சின்னஞ்சிறு வார்த்தைகளில் எப்போதும் சிரிப்பிருந்தால்  கவலைகள் பறந்திடுமே மகிழ்ச்சியும் மலர்ந்திடுமே.  பொன் நகைக்காக சிலர் வாழ உணவின் சுவைக்காக பலர் வாழ கண்ணீரே காணாமல் போகிடவே என்றும் புன்னகையோடு வாழ்ந்திடுவோம்.  தனக்கு உள்ள பல கவலைகளை  தன் உளத்தோடு புதைத்திடுவான் உடைந்திருக்கும் மனிதர்களை  உதட்டோரச் சிரிப்பாலே உயர்த்திடுவான்.  வாய்க்கு நல் விருந்தாகும் நோய்க்கு நல் மருந்தாகும் நலம் காக்கும் நட்பாகும்  உயிருக்கு உற்ற உறவாகும். 

நாட்டை ஆளும் நாய்களே

நாட்டை ஆளும் நாய்களே - நீங்கள்  வேட்டை ஆடும் கூட்டம் எதற்கு  மாட்டை போல உழைப்பவனுக்கு மாற்றம் கூட மண்ணுக்குள் இருக்கு சோத்துக்காக உழைப்பவன் சொத்தை விற்று தின்று பிழைப்பது எதற்கு கற்றது நன்றெனில் மக்கள் இன்னும் காலுக்கடியில் கிடப்பது எதற்கு  தொகுதிகள் பலவென பிரித்திடுவார் நிதியில் பகுதியை கொள்ளை அடித்திடுவார் மாற்றம் மலரும் என்றிடுவார்  ஏமாற்றத்தை மட்டும் தந்திடுவார் திட்டம் போட்டு திருடிடுவார் தான் திருந்திட மட்டும் மறந்திடுவார் மக்கள் கண்களை இலவச இருளுள் இழுத்திடுவார் ஓர் நாள் மொத்தமும் அழித்திடுவார்.