சிரிப்பு
சின்னஞ்சிறு வார்த்தைகளில்
எப்போதும் சிரிப்பிருந்தால்
கவலைகள் பறந்திடுமே
மகிழ்ச்சியும் மலர்ந்திடுமே.
பொன் நகைக்காக சிலர் வாழ
உணவின் சுவைக்காக பலர் வாழ
கண்ணீரே காணாமல் போகிடவே
என்றும் புன்னகையோடு வாழ்ந்திடுவோம்.
தனக்கு உள்ள பல கவலைகளை
தன் உளத்தோடு புதைத்திடுவான்
உடைந்திருக்கும் மனிதர்களை
உதட்டோரச் சிரிப்பாலே உயர்த்திடுவான்.
வாய்க்கு நல் விருந்தாகும்
நோய்க்கு நல் மருந்தாகும்
நலம் காக்கும் நட்பாகும்
உயிருக்கு உற்ற உறவாகும்.
Comments