வாழுவோம்
வெளுத்த நிறத்தில் சிறுத்த இதழ் வழி சிரித்தவளே கருத்த குழலினை அவிழ்த்து என்னை அதன் வழி அலைபாய விட்டவளே. மூடிய இமைக்குள் உருட்டிய விழியில் என்னை புரட்டி போட்டவளே கை குலுக்கி சிரிக்கும் வேளையிலே என் ஆயுள் ரேகை ஆனவளே அடர் இருளில் புகழ் தேடும் ஆயிரம் விண்மீனிருந்து என்ன பயன் முழு மதி இல்லா நேரத்திலும் பிறை மதியினை, ஓதும் புகழது போதுமல்லோ அது போல் இவளெனக் காகிடுவாள். பகலவனின் பார்வையிலே பயந்துருகும் பனித் துளியாய் அவ்வினிமை அவள் தரவே காற்று தீண்டும் சோலை அந்த கடற்கரையில் அந்தி மாலை அன்று தூது போனதந்த நாரை இங்கே அலை மோதும் பாறை பெண் மேலும் காதலுண்டு மண் மேலும் காதலுண்டு இறை மீதும் காதலுண்டு இவ்வுலகில் நீண்டு வாழ ஆசை உண்டு ஆசையெல்லாம் நிறைவேறாது அதானால் தான் ஆசை கொள்கிறேன் நிராசை என்னை நிதானபடுத்துமென்றே நினைத்து வாழ்கிறேன் நிரந்தர நிம்மதி தரும் வாழ்வை வேண்டி.