ஈஸ்வரா
ஆதி சிவனானவன்
பாதி உடல் தந்தவன்
எங்கும் தவமானவன்
கங்கை தலை கொண்டவன்
தில்லையில்
நடராஜனாய் ஆடினான்
நல்லூரில்
நிற மைந்தாகினான்
கீழ்வேளூரின்
மேலமர்ந்த அக்ஷய லிங்கமாகினான்
பரமத்துவம் வாய்ந்ததால் பரமாத்மாவாகினான்.
ஆண்டவன் ஆன போதும்
ஆயிரமாயிர லீலைக்காக
யுகந்தோரும் பிறக்கிறான்
பிறப்பு இறப்பு அற்றவன்
புட்டுக்கு மண்சுமந்தான்
மனமுருகி பூசை செய்த
பூசலாருக்கவன் தெரிந்தான்
பூதங்களில் அவன் கலந்தான்
பூவுலகில் நீக்கமற அவன் நிறைந்தான்
சாட்சிநாதனாய் எனக்குள் மன காட்சி தருபவன்.
Comments