மீன்கள்
வலைப் போட்டுப் பிடிக்க பொரிப் போட்டு வளர்ப்பர் சிலர் கால் நீட்டிக் களிப்பர் அவை கடிப்பதை ரசிப்பார் சிறார் விளையாட்டுக்கும் உணவாகும் கருவாட்டுக்கும் உயிரையே விடுவர். பசியென கரை வரும் புசித்திடத் துடித்திடும். படிகளில் படர்ந்து பாசியாய் நிறைந்தது - அதன் பசிப் போக்கிட பதிலாய் அமைந்தது. அவதார முதல் ஆன அழகான பிறப்புடைய மீன்கள்.