Posts

Showing posts from July, 2018

' இழப்பின் பின் உழைப்பு '

காடு கழனி முதல் நாடு நகரம் எல்லாம் நரகம் ஆகிப் போச்சு  . மாறும் காலமிதில் மானம் மறைத்திடவே ஞாலம் உணர்த்திப் போச்சு  . நாளும் உழைத்து தினம் வாழும் உறவுகளின் வாழ்க்கை தொலைந்து போச்சு  . அறுத்து விழும் அருவி அடித்து செல்லாறு அழியாத வளம் நூறு  . மறந்தோம் அக நா நூறு கடந்தோம் புற நா நூறு ஆட்சி அமைக்க போதும் ஐநூறு  . பிளவு பட்ட நாம் இழவு கடந்தெழுந்தால் உழவே உயிர் மூச்சு .

'தாயகமா, நாயகமா, நாடகமா , '

ஊசிப் போன ஊடகம் இங்கே ஊரெங்கும் நாடகம், நம் நாடே தாயகம் அதில் பன்னாட்டின் நாயகம். வாய் கதை கதையா பேசுது  காத்து கூட கார்ப்பரேட்டா வீசுது, கூத்தாடி பின்னால காத்தாடி ஆகுது காத்தாடிய சுத்தவிட்டு கூத்தாடி குளிர் காயுது. கூப்பாடு போட்டு உழைச்சி தினமும் உயிர்கள் சாப்பாட திங்குது, ஆட்சி போக்கின் காட்சி கண்டால் அடி வயிறும் கலங்குது.