'தாயகமா, நாயகமா, நாடகமா , '
ஊசிப் போன ஊடகம் இங்கே
ஊரெங்கும் நாடகம்,
நம் நாடே தாயகம் அதில்
பன்னாட்டின் நாயகம்.
வாய் கதை கதையா பேசுது
காத்து கூட கார்ப்பரேட்டா வீசுது,
கூத்தாடி பின்னால காத்தாடி ஆகுது
காத்தாடிய சுத்தவிட்டு கூத்தாடி குளிர் காயுது.
கூப்பாடு போட்டு உழைச்சி
தினமும் உயிர்கள் சாப்பாட திங்குது,
ஆட்சி போக்கின் காட்சி கண்டால்
அடி வயிறும் கலங்குது.
Comments