' இழப்பின் பின் உழைப்பு '

காடு கழனி முதல்
நாடு நகரம் எல்லாம்
நரகம் ஆகிப் போச்சு .

மாறும் காலமிதில்
மானம் மறைத்திடவே
ஞாலம் உணர்த்திப் போச்சு .

நாளும் உழைத்து தினம்
வாழும் உறவுகளின்
வாழ்க்கை தொலைந்து போச்சு .

அறுத்து விழும் அருவி
அடித்து செல்லாறு
அழியாத வளம் நூறு .

மறந்தோம் அக நா நூறு
கடந்தோம் புற நா நூறு
ஆட்சி அமைக்க போதும் ஐநூறு .

பிளவு பட்ட நாம்
இழவு கடந்தெழுந்தால்
உழவே உயிர் மூச்சு.



Comments

Boomi Geevan said…
சிறப்பு நண்பர்

Popular posts from this blog

மனிதம் மலரட்டும்

உழவின் உயர்வு

வேற்றுமையில் ஒற்றுமை

வேர்கடலை

முருகா

செம்மொழித் தமிழ்

நண்பகல்

மதுவே உயிரே