Posts

Showing posts from August, 2018

'காற்று வெளியிடை கண்ணதாசா'

அவன் வார்த்தை, வாழ்க்கைக்கு வரமானது வரமே சாதிக்க உரமானது உரமே எனக்கு இன்னுயிரானது இவ்வுயிரும் உந்தன் புகழ்பாடுது. வார்த்தை வரிகள் கா ன மானது வாழ்வில் ப ட்ட காயம் கூறுது வழி அற்றவனின் உற்ற துணையாகுது மனமென்னும் உளத்திற்குன் குரல் கேட்குது.

" உண்மையும் " " உடலும் "

மாறாத குணம் தீராத ரணம் ஆறாத உளம் வற்றாத வளம் . கல்லாத மனம் இல்லாத பணம் பொல்லாத குணம் வறுமையின் வரம்  . வாக்குறுதி வரும் அரசியல் களம் பணம் வரும் வலம் இது கீழ்த்தன தரம்  . சிந்தைக்கு சிறம் இதய இயக்க இடம் உயிர் உதிர் வடிவ உரம் வாழும் உடலுக்கு வரம். களவான உண்மைக்கும் களவாடிய உடலுக்கும் கடை நொடிப் பொழுதினில் காலனின் கரம்  .