Posts

Showing posts from September, 2019

' தொன்மைக்கு அஞ்சேல் '

சரியும் தவறும் சரியாய் அமைய தடமோடித் தடு மாற்றம் கலைய பாதம் படர்ந்து பாதை விரிய தேசம் கடந்து நேசம் அடைய மானுடத் தூடே மனிதம் நிறைய ஆதி இன்பமதை மீதியோர் அறிய பெரும்படையதை வழி நடத்திட துணிய பேதமை அகற்றி பேரறிவால் தெளிய ஆளுமை என்பதன் ஆழம் தெரிய தனிமை எனும் தனிச்சிறப்பை தறிய தானெனும் கர்வத்  தலைக்கனம்  எரிய ஈகை எண்ணம் இப்புவி செழிய சாலும் வார்த்தைகள் அகராதியில் அழிய பெருநோய் சுயநலம் பெரிதற்று ஒழிய விரலின் மையால் விடியல் விடிய ஒளிவிளக்காய் மட்டும் நாம் தலை குணிய மான இழுக்குகளும் நம் செயலால் மறிய அவலம் அனைத்தையும் அவனியில் கலைய ஈனச் சபலங்களை சங்கூதி விரட்டிட இப்புவி வாழ்கையிலென்றும் தொன்மைக்கு அஞ்சோம்.

' கை பேசி

தொலைவாலே  தொலைந்து வரும் உறவுளை அலை வரிசைகளில்  அழைத்து வரும் அவர் குரலை தொட்டுணர முடியாத துயர் துடைத்து விட்டு விலகும் பெரும் ரணத்தை வேரருத்து உலகத்தை உள்ளடக்கி உலகாக கொண்டுள்ளதோ வாய் பேச நினைப்பதை விரல் பேசும் காலமிது விசை பலகையில் விளையாடும் விரல் போடும் கோலமிது வழி பார்வை திறன் எல்லாம் வியந்து விழித்து பார்க்கிறது போட்டிக்கு வந்தது கருவி ஒளிப் படமியா ரசனை அழிக்க வந்த கிருமியா கதை சொல்லி சோறூட்டிய காலமெல்லாம் காணொளியாய் வளைதளத்தில் வலம் வந்து உயிர் இல்லா உடலாகி நிலாச் சோற்றின் நிகரராகி விலைக்கும் வாங்கும் உறவிதுவோ.