' கை பேசி

தொலைவாலே 

தொலைந்து வரும் உறவுளை
அலை வரிசைகளில் 

அழைத்து வரும் அவர் குரலை
தொட்டுணர முடியாத துயர் துடைத்து
விட்டு விலகும் பெரும் ரணத்தை வேரருத்து
உலகத்தை உள்ளடக்கி உலகாக கொண்டுள்ளதோ

வாய் பேச நினைப்பதை
விரல் பேசும் காலமிது
விசை பலகையில் விளையாடும்
விரல் போடும் கோலமிது

வழி பார்வை திறன் எல்லாம்
வியந்து விழித்து பார்க்கிறது
போட்டிக்கு வந்தது கருவி ஒளிப் படமியா
ரசனை அழிக்க வந்த கிருமியா

கதை சொல்லி சோறூட்டிய காலமெல்லாம்
காணொளியாய் வளைதளத்தில் வலம் வந்து
உயிர் இல்லா உடலாகி
நிலாச் சோற்றின் நிகரராகி
விலைக்கும் வாங்கும் உறவிதுவோ.

Comments

Popular posts from this blog

மனிதம் மலரட்டும்

உழவின் உயர்வு

' முற்காலம், இக்காலம், எக்காலம் நற்காலம் '

இதயம்

மனைவி

ஒழுக்கம்

சாதி...

பிள்ளை