' தொன்மைக்கு அஞ்சேல் '
சரியும் தவறும் சரியாய் அமைய
தடமோடித் தடு மாற்றம் கலைய
தடமோடித் தடு மாற்றம் கலைய
பாதம் படர்ந்து பாதை விரிய
தேசம் கடந்து நேசம் அடைய
மானுடத் தூடே மனிதம் நிறைய
ஆதி இன்பமதை மீதியோர் அறிய
ஆதி இன்பமதை மீதியோர் அறிய
பெரும்படையதை வழி நடத்திட துணிய
பேதமை அகற்றி பேரறிவால் தெளிய
ஆளுமை என்பதன் ஆழம் தெரிய
தனிமை எனும் தனிச்சிறப்பை தறிய
தனிமை எனும் தனிச்சிறப்பை தறிய
தானெனும் கர்வத் தலைக்கனம் எரிய
ஈகை எண்ணம் இப்புவி செழிய
சாலும் வார்த்தைகள் அகராதியில் அழிய
பெருநோய் சுயநலம் பெரிதற்று ஒழிய
பெருநோய் சுயநலம் பெரிதற்று ஒழிய
விரலின் மையால் விடியல் விடிய
ஒளிவிளக்காய் மட்டும் நாம் தலை குணிய
மான இழுக்குகளும் நம் செயலால் மறிய
அவலம் அனைத்தையும் அவனியில் கலைய
அவலம் அனைத்தையும் அவனியில் கலைய
ஈனச் சபலங்களை சங்கூதி விரட்டிட
இப்புவி வாழ்கையிலென்றும் தொன்மைக்கு அஞ்சோம்.
Comments