Posts

Showing posts from January, 2021

வாழ்க்கை

இனி ஒரு பிறவி எதற்காக இத்துனை இன்பங்கள் இங்கிருக்க அத்தனை உயிரும் பயணிக்கும்  வாழ்க்கை எனும் அழகிய சுற்றுலாவில். பசியோ, பணமோ, மனமோ விதியோ, சதியோ, ரணமோ பிணமாகும் வரை தான் வாழ்ந்திடுவோம் - புதிரான வாழ்வில் தற்கொலை தவிர்த்து ரசித்திடுவோம்.  நம்பிக்கை அற்றார்க்கு இரு கை கால்களே உற்ற பெரும் உயர்வாகும் கை, கால்கள் அற்றவர்க்கு நம்பிக்கை மட்டும் தான் மற்ற பிறவற்றிலெல்லாம் பெற்ற பெரும் வரமாகும் இருகை இருக்கையும் செய்கை கொள்கையும் சேர்க்கை செயற்கையும்  இயற்கை என இன்னபிற பல கைகளையும்  இவ் வாழ்க்கை தான்வடி வமைக்குதடா. 

உழவின் உயர்வு

தொட்டில் பிறப்பிலே தாலாட்டு கேட்பது போல். ஊட்டும் உணவும் பாலுமே உடலுயிரை வளர்த்திடும். காளை காணியில் கழுநீர் குடித்து உழைத்திடும். களப்பை தாங்கும் கைகளே, கால் வயிற்று கஞ்சி வார்த்திடும். வித்து தாங்கும் மண்ணே சத்தான உழவின் சொத்தாகும். உழவனின் திறம் எவ்வாறு எந்திரத்துக் கிணையாகும். நடவு, வரப்பு அறுவடைகள் நாமறியவேண்டும். மழைநீரும் காற்றும் ஒளியும் விதையை, வேருடை மரச் செடிகளாக மாற்றும். பிளவு பட்ட உலகில் உழவு திக்கு எட்டும் வாழும். தலைமுறை பல கடந்து யாவையும் இது ஆளும்.  சேறு கண்ட கைகள் பலருக்கும் சோறு போடும்.  வாங்கிய கடன் நின்று சில நேரம் இவர் வாழ்வை கொன்று போடும். உலகை காக்கும் உழவால் உடலுயிரை காக்க வேண்டும் தம்பி  உழவை காக்க நாமும் உழைத்துப் பார்க்க வேண்டும்.

தெளியட்டும் பண போதை

உரிமை செலுத்த முன்வருவார்  உறவென கூற கூசிடுவார் நாயுடன் கொஞ்சி பேசிடுவார் நானெனும் எண்ணம் நாவில் உதிர ஏசிடுவார். கடன் வாங்கி வாழ்வை கழித்திடுவார் கையேந்தி நிற்கையில் கௌரவம் பார்த்திடுவார்.  ஆடம்பரமாய் காட்டி கொள்ள தன் ஆயுளையும் சிலர் அடகு வைப்பார்.  காசொன்றே உலகென்பார்  பேர் புகழே பெரும் பெருமை என்பார் எல்லாம் என்னால் எனும் எண்ணம் கொள்வார் அது அடுத்தவரிடம் கொள்ளை அடித்தது என்பதை மறைத்திடுவார்.  அழிந்து போய்விடும் பிறவியிதில் ஏழு தலைமுறைக்கும் சொத்து சேர்த்து வைப்பார். ஏழை மக்களை கண்டாலோ கூழை குடித்து உழைத்து வாழ்ந்திடுவார் நாளை விடிய எழுந்திடலாமெனும் உண்மை நியதியில் உலாவிடுவார்.