தெளியட்டும் பண போதை
உரிமை செலுத்த முன்வருவார்
உறவென கூற கூசிடுவார்
நாயுடன் கொஞ்சி பேசிடுவார்
நானெனும் எண்ணம் நாவில் உதிர ஏசிடுவார்.
கடன் வாங்கி வாழ்வை கழித்திடுவார்
கையேந்தி நிற்கையில் கௌரவம் பார்த்திடுவார்.
ஆடம்பரமாய் காட்டி கொள்ள
தன் ஆயுளையும் சிலர் அடகு வைப்பார்.
காசொன்றே உலகென்பார்
பேர் புகழே பெரும் பெருமை என்பார்
எல்லாம் என்னால் எனும் எண்ணம் கொள்வார்
அது அடுத்தவரிடம் கொள்ளை அடித்தது என்பதை மறைத்திடுவார்.
அழிந்து போய்விடும் பிறவியிதில்
ஏழு தலைமுறைக்கும் சொத்து சேர்த்து வைப்பார்.
ஏழை மக்களை கண்டாலோ
கூழை குடித்து உழைத்து வாழ்ந்திடுவார்
நாளை விடிய எழுந்திடலாமெனும்
உண்மை நியதியில் உலாவிடுவார்.
Comments