உழவின் உயர்வு


தொட்டில் பிறப்பிலே தாலாட்டு கேட்பது போல்.
ஊட்டும் உணவும் பாலுமே உடலுயிரை வளர்த்திடும்.
காளை காணியில் கழுநீர் குடித்து உழைத்திடும்.
களப்பை தாங்கும் கைகளே, கால் வயிற்று கஞ்சி வார்த்திடும்.

வித்து தாங்கும் மண்ணே சத்தான உழவின் சொத்தாகும்.
உழவனின் திறம் எவ்வாறு எந்திரத்துக் கிணையாகும்.
நடவு, வரப்பு அறுவடைகள் நாமறியவேண்டும்.
மழைநீரும் காற்றும் ஒளியும் விதையை, வேருடை மரச் செடிகளாக மாற்றும்.

பிளவு பட்ட உலகில் உழவு திக்கு எட்டும் வாழும்.
தலைமுறை பல கடந்து யாவையும் இது ஆளும். 
சேறு கண்ட கைகள் பலருக்கும் சோறு போடும். 
வாங்கிய கடன் நின்று சில நேரம் இவர் வாழ்வை கொன்று போடும்.

உலகை காக்கும் உழவால் உடலுயிரை காக்க வேண்டும் தம்பி 
உழவை காக்க நாமும் உழைத்துப் பார்க்க வேண்டும்.

Comments

Popular posts from this blog

மனிதம் மலரட்டும்

' முற்காலம், இக்காலம், எக்காலம் நற்காலம் '

இதயம்

மனைவி

ஒழுக்கம்

சாதி...

பிள்ளை