Posts

Showing posts from August, 2021

ஈரத்தின் கொதிப்பு

அலையின் கொந்தளிப்பில் நுறை மிதக்க அவளின் இருகைகள் எனை பிடிக்க ஆவலுடன் பயம் கலந்த ஆசையில் நானிருக்க  இருக்கிய கையால் இதயம் வேகமாய் துடிதுடிக்க.  கடல் நீர் எங்கள் கால் பட்டு  கரை தொட்டு செல்ல இருள் நீங்கி பகல் பிறக்கும்  இடைவேளையில் மெல்ல மெய் தீண்டும் காற்று  மெய்சிலிர்க்க செய்து அவள் இதழோரச் சிரிப்பால் இசை பாடிச் செல்ல பாறையில் அலை மோதிட மனதில் காதலால் காயம் உருவாகுதே விரல்கள் மட்டும் பிணைந்திருக்க என் ஆசைகள் அவளை நினைத்திருக்கும் நான் குளித்து முடித்த ஈரத்துடன்  பயணம் செய்திட புறப்பட்டோம் - ஆங்கே அவள் கட்டி பிடித்த கணம் முதலே கொதித்து கொண்டே தானிருந்தேன் விழித்ததும் கனவென கண்டறிந்தேன்.

வயசுக் கோளாறு

வயதில் மூத்ததவளை  விரும்பு மனம் உடையவரை தூற்றி தாழ்த்தி பேசிடுவார். ஆசைக்கு வயதேது  அதட்டுவார்க்கு அறிவேது இகழ்வதால் நிகழும்  தவறுக்கு இணை இங்கேது.  வழிதனையும்  இழந்துவிட்டால்  மணமுடிக்கும் வயதில் குழப்பம் வந்து சேர்ந்துவிட்டால் பிரிவு தரும் பெருதுயரை தாங்குமனம் இல்லாமல்  பித்தனாகி சுற்றுவோரிங்  கெத்தனை பேர். காதலிங்கு அழிவதில்லை  காதலுக்கு வயதுமில்லை. குழந்தை மணத்தடையாலே குழந்தையிலே தடுமாற்றம் குலவி போலுலாவி வரும்  குடும்பத்திலும்  பெரும் மாற்றம் ஆதியிலே இதற்கு ஒரு  ஏமாற்றம்  கொடுத்து விட்டால் மீதமுள்ள வாழ்க்கையிலே பெரும் மாற்றம் பெறு மாற்றம்.