வயசுக் கோளாறு
வயதில் மூத்ததவளை
விரும்பு மனம் உடையவரை
தூற்றி தாழ்த்தி பேசிடுவார்.
ஆசைக்கு வயதேது
அதட்டுவார்க்கு அறிவேது
இகழ்வதால் நிகழும்
தவறுக்கு இணை இங்கேது.
வழிதனையும் இழந்துவிட்டால்
மணமுடிக்கும் வயதில்
குழப்பம் வந்து சேர்ந்துவிட்டால்
பிரிவு தரும் பெருதுயரை
தாங்குமனம் இல்லாமல்
பித்தனாகி சுற்றுவோரிங் கெத்தனை பேர்.
காதலிங்கு அழிவதில்லை
காதலுக்கு வயதுமில்லை.
குழந்தை மணத்தடையாலே
குழந்தையிலே தடுமாற்றம்
குலவி போலுலாவி வரும்
குடும்பத்திலும் பெரும் மாற்றம்
ஆதியிலே இதற்கு ஒரு
ஏமாற்றம் கொடுத்து விட்டால்
மீதமுள்ள வாழ்க்கையிலே
பெரும் மாற்றம் பெறு மாற்றம்.
Comments