ஈரத்தின் கொதிப்பு

அலையின் கொந்தளிப்பில் நுறை மிதக்க
அவளின் இருகைகள் எனை பிடிக்க
ஆவலுடன் பயம் கலந்த ஆசையில்
நானிருக்க 
இருக்கிய கையால் இதயம் வேகமாய் துடிதுடிக்க. 

கடல் நீர் எங்கள் கால் பட்டு 
கரை தொட்டு செல்ல
இருள் நீங்கி பகல் பிறக்கும் 
இடைவேளையில் மெல்ல

மெய் தீண்டும் காற்று 
மெய்சிலிர்க்க செய்து
அவள் இதழோரச் சிரிப்பால்
இசை பாடிச் செல்ல

பாறையில் அலை மோதிட
மனதில் காதலால் காயம் உருவாகுதே
விரல்கள் மட்டும் பிணைந்திருக்க
என் ஆசைகள் அவளை நினைத்திருக்கும்

நான் குளித்து முடித்த ஈரத்துடன் 
பயணம் செய்திட புறப்பட்டோம் - ஆங்கே
அவள் கட்டி பிடித்த கணம் முதலே
கொதித்து கொண்டே தானிருந்தேன்
விழித்ததும் கனவென கண்டறிந்தேன்.

Comments

Popular posts from this blog

மனிதம் மலரட்டும்

உழவின் உயர்வு

' முற்காலம், இக்காலம், எக்காலம் நற்காலம் '

இதயம்

மனைவி

ஒழுக்கம்

சாதி...

பிள்ளை