Posts

Showing posts from September, 2021

முடிவுள் பொருள்

வார்த்தைகள் ஊமையாகிட வாழ்க்கை யின் அர்த்தம் விளங்கும்  பொருள் என்னும்  வார்த்தை யின்  பொருளை  செயல் ஒன்றே முகவரி ஆக்கும்  புரியாத மனதின் பயணத்தை அறிய  அரிதாய் ஓர் புரியாப் பயணம் பிறப்பை தெரியாத உலகம் இதிலே தெரியாதோர் உறவாய் அமைவார் பிறவி ஒன்றே விடையகும் முடிவில் அவன் வாழ்வும் முடிவாகும்  விழியின் வழி தெரியும் ஆனால்  தெரியாத வழியில் வருமிடரிலே விழி விரியும்  கூட்டுள் குடல்கள் இருக்கும் வரைக்கும் குடையும் பசிக்கு விடையாய் உணவு சுயநலம் பொங்கும் உடலின் எடையில்  தடையாய் தங்கி கிடக்குது மூளையின் அறிவு முடிவுகளை முடிவெடுப்போம் முடிவில் தான் முடிவறிவோம்  முடியாத முதலாகும் அது முன்னோர் விட்டு சென்ற நம் பிறப்பாகும் 

வேர்கடலை

வேகாத வெயிலுல  கால் கடுக்க நிக்குறான் வேகவச்ச வேர்கடலய  வேர்த்து வடிய விக்கிறான் உப்பு தண்ணீரிலு - வேக  வச்சதாலது விக்கல  அவனோட உடலில் படிஞ்ச - உப்புக்காக  ஒப்புக்கேனும் விக்குது வானலியில் வறுகடலை வயித்து பசிய கொஞ்சம் போக்குது வறுக்குறப்போ வர்ர ஓசை கேக்க இனிமை ஆகுது. பொட்டலத்த பிறிக்கும் போது வறுத்த மண் வாசத்த  மூக்கு மோப்பம் புடிக்குது சப்புகொட்டி சாப்பிட்டு நாக்கு தாளம் போடுது.