வேர்கடலை
வேகாத வெயிலுல
கால் கடுக்க நிக்குறான்
வேகவச்ச வேர்கடலய
வேர்த்து வடிய விக்கிறான்
உப்பு தண்ணீரிலு - வேக
வச்சதாலது விக்கல
அவனோட உடலில் படிஞ்ச - உப்புக்காக
ஒப்புக்கேனும் விக்குது
வானலியில் வறுகடலை
வயித்து பசிய கொஞ்சம் போக்குது
வறுக்குறப்போ வர்ர ஓசை
கேக்க இனிமை ஆகுது.
பொட்டலத்த பிறிக்கும் போது
வறுத்த மண் வாசத்த
மூக்கு மோப்பம் புடிக்குது
சப்புகொட்டி சாப்பிட்டு
நாக்கு தாளம் போடுது.
Comments