முடிவுள் பொருள்

வார்த்தைகள் ஊமையாகிட
வாழ்க்கை யின் அர்த்தம் விளங்கும் 

பொருள் என்னும்  வார்த்தை யின்  பொருளை 
செயல் ஒன்றே முகவரி ஆக்கும் 

புரியாத மனதின் பயணத்தை அறிய 
அரிதாய் ஓர் புரியாப் பயணம்

பிறப்பை தெரியாத உலகம் இதிலே
தெரியாதோர் உறவாய் அமைவார்

பிறவி ஒன்றே விடையகும்
முடிவில் அவன் வாழ்வும் முடிவாகும் 

விழியின் வழி தெரியும் ஆனால் 
தெரியாத வழியில் வருமிடரிலே விழி விரியும் 

கூட்டுள் குடல்கள் இருக்கும் வரைக்கும்
குடையும் பசிக்கு விடையாய் உணவு

சுயநலம் பொங்கும் உடலின் எடையில் 
தடையாய் தங்கி கிடக்குது மூளையின் அறிவு

முடிவுகளை முடிவெடுப்போம் முடிவில் தான் முடிவறிவோம் 
முடியாத முதலாகும் அது
முன்னோர் விட்டு சென்ற நம் பிறப்பாகும் 

Comments

Popular posts from this blog

மனிதம் மலரட்டும்

உழவின் உயர்வு

' முற்காலம், இக்காலம், எக்காலம் நற்காலம் '

இதயம்

மனைவி

ஒழுக்கம்

சாதி...

பிள்ளை