ஆசை யாரை விட்டது
உழைக்க தான் ஆசை ஆடம்பரத்திற்காய் அல்ல அடிபணிந்தும் அல்ல அத்தியாவசியத்திற்காய் படிக்க தான் ஆசை பட்டங்களுக்காய் அல்ல பணிகளுக்காய் அல்ல பட்டறிவு, பாடத்தின் பேதம் தெளிவு கொள்ள சேவை செய்ய ஆசை ஒற்றுமைக்காய் அல்ல வேற்றுமையை வேரறுக்க அல்ல, என் தவறை திருத்தி கொள்ள உணர்ந்து கொள்ள ஆசை உறவை பற்றி அல்ல உரிமை பற்றி அல்ல உலகு பற்றியும் மனிதம் பற்றியும் இவை தாண்டி நான் அறிந்த அந்த புனிதமான இறைவனை கண்டு கொள்ள .