என்ன நினைக்கிறாளோ
என்ன நினைக்கிறாளோ
இல்லை என்னை நினைக்கிறாளோ
வெண் வண்ண நிலவை போல
என் கண்ணை கவர்கிறாளோ
வீட்டின் தின்னை காற்று
இதயத்தில் என்னை துளைத்து வீச
தீடீரென கேட்டேன் அங்கே
அவளும் காதல் மொழிகள் பேச
நாணல் வலை போல் புருவம்
அதில் மாட்டிய மீண்களாக கண்கள்
இறை தேடி திரியும் அவள் விழி
என் விழிக் கிறையானதென்ன
கத்தி இன்றி ரத்தமின்றி அறுவை சிகிச்சை செய்கிறாள்
அறிகுறி யாலவள் இதயத்தை என் இதயத்தில் தைக்கிறாள்.
இருப்பது ஒரு வாழ்க்கை என்று எனக்குணர்தி சென்றவள்
உணரவே இல்லையோ என்
வாழ்க்கையின் தொடர் கதையினை.
Comments