' தமிழ் நமது அடையாளம் '
கிரகம் புடிச்ச உங்களுக்கு கரகம் சொல்லித்தரும் பாடமடா தப்பா நினைக்கும் மக்கள் முன்னே தப்பாட்டம் தரும் வேகமடா பாரதத் தமிழ் நாட்டுக்குள்ள பரதத்தின் புகழ் ஜதி சலங்கைக்குள்ள இசையை தருமந்த ஏழு சுவரம் இசைத்திட இனிமை தரும் நாத சுவரம் தப்பை தட்டிக் கேட்கும் நீதிக்கு ரௌத்திரம் எங்கும் பொங்கி ஓடும் கழுத்து கேட்கும் தாலி நெற்றி கேட்கும் திலக வேலி. உதிரம் சிந்தும் உழவனுக்கும் உயர் மரியாதை செய்ய பொங்கல் பொங்கும் கவி கம்பன் பாரதி தந்த தமிழ் பாரதிதசனில் புரட்சிகள்செய்த தமிழ் தமிழுக்கு ழகரம் சிகரம் போல உயிருக்கு தமிழ் என்றும் உதிரம்போல கண்ணதாசனில் கரைந்து வளர்ந்த தமிழ் என்றும் எங்களின் அடையாளமான மானத் தமிழ்.