' ஆட்டிப்படைப்பவை அழிவை அடையும் '
உழவின் இழவு ,
உயருது வறுமையின் அளவு ,
உடுத்தும் உடையின் விலையோ மலிவு ,
உயிர்கள் அதர்கென உழைத்தே அழிவு .
நில்லா வாழ்வில் ,
இல்லா இயற்கை ,
பொல்லா நோய் வர ,
வழி வகுப்பது செயற்கை .
நாட்டு வைத்தியம்
நாம் மறந்திட்டோம் ,
நாடும் ஆங்கில மருந்தோ
நமை கொல்ல தீட்டுது திட்டம் .
களவு, காமம் ,
காசின் மோகம் ,
ஆடம்பரம் தேடும் ,
ஆறடி தேகம் .
Comments