வேசி தொழிலல்ல வேதனை '
சைகையால கூப்பிட்டு
ஆசைகளை போக்கிட்டு ,
கால கொடுமையால
காசும் கொஞ்சம் சேத்துகிட்டு ,
காலப் போக்கில் போய்கிட்டு
கால் வயித்துக்கு சாப்பிட்டு ,
வாழ்வின் வலி பொறுக்காம
வலி பொறுக்கும் காமம் தேடியே ,
காலம் தந்த கறைகளை
கடந்து வாழ வேண்டியே ,
குடும்பத்துக்கு கடன் பட்டு
துன்பத்துக்கும் உடன்பட்டு ,
கவர்ச்சி உடை காட்டி - மன
சாட்சிக்கு கொள்ளியிட்டு ,
இந்நிலை தந்த சூழலுக்கும்
தன் வாழ்வை தியாகம் செய்தால்
தாசி என்பார் உலகிலே,
நாதியற்ற அவள் வாழ்வை
யாரறிவார் உளத்திலே ........
Comments