' பாவமா சாபமா பைதியமாக்குமா '
பெத்துப்புட்டு மறந்துப்புட்டு
தவிக்கவிட்டு பிரிஞ்சிப்புட்டு
துடிக்கவிட்டு அழுகவிட்டு
வெறுத்த வாழ்வும் துறத்திகிட்டு
வறுத்தப்பட்டே ஓடிகிட்டு
வாழ்க்கை அத தேடிகிட்டு
வலியை மட்டும் சுமந்துகிட்டு
காலனுக்கு காத்துகிட்டு
காசு சேர்க்க கத்துகிட்டு
உடலை விட்டு
உசுரு போக
சமமாகிறோமே
மண்ணை தொட்டு
பிறப்பு பாவமா அதில்
பிரிவு சாபமா இந்த
மாய உலகம் நம்மை பைத்தியமாக்குமா ?
Comments