Posts

Showing posts from April, 2019

' விலாசமாகும் வியாபாரம் '

பால் குடிக்க தாய் இல்லை பசி போக்க வழியில்லை பாசப் போர் வலி தொல்லை புரியும் திறன் கொண்டோ ரிங்கில்லை. பணப் பேய் பெரும் நோயாகி பணமெனும் மன நோய் தாக்கி மதிப்புள்ள மனிதத்தை மதியடியாக்கி மதிப்பற்ற காகிதம் காசாய் போனதால் உன்னத வாழ்வும் நாசம் ஆகுதே. குழந்தை விற்பனை வியாபாரமா கூச்சல் கதறல்களதற்கு சேதாரமா சிசு கொலையை மிஞ்சும் பயங்கரமா இத் தரங்கெட்ட செயலினி நீங் கிடுமா?

' புத்தகம்

உரையாடி மனம்வாடி துன்பமிகு உழலாம் புறம் பேசு முலகில் புற முதுகு மிடலாம் புதிரான வாழ்வில் பலர் சதுராடி விடலாம் பணம் தேடும் பலரும் படு குழியில் தடுமாறி விழலாம் தடையோடு தவழ்ந்தோடி நன்நடை போட முயன் றிடலாம் தடுமாறும் பொழுதில் தவமாக திகழும் பக்கங்கள் புரளும் பத்தகம் தேடி விடலாம். எழுத்தின் மா தவமாகி எழு பிறப்புக் குறுதுணையாகி எவர் எண்ணம் எது வானாலும் அவர் எண்ணம் அவ்வழி மொழிந்து புத் தகம் படைப்பது புத்தகமாகும்.

' பாவாய் ஒரு பாவை '

கட்டு உடல் பெண்மை காட்சிக்கு மென்மை மொட்டு இதழ் பூவாய் தொட்டவுடன் மலர மொத்த உலகெல்லாம் ஒத்த இதழ் சிரிப்பில் மொழி பேசும் வார்த்தை அவள் விழி பேசிச் செல்லும் அவள் ஆ...

' திருந்துக தலைமுறை '

விளை நிலத்தை விலை பேசி சொத்தை சேர்த்தாலும் அதில் நாமும் சிலையானாலும் அதன் மேலும் புழுதித்தூசி. கறை படிந்தாலும் சிறை அடைந்தாலும் முறை மறந்தாலே மதி மலடாகும். தலை இல்லாமல் தலை ஆட்டாதீர் கூட்டணியாலே கொல்லாதீர். பசியோடு தூங்காதீர் - இது பகை நாடென  பயம் கொள்ளாதீர் நாடெனும் வீட்டினில் நன்மைகள் மேவிட மறவாதீர்

" சாமானியனின்

மக்களையும் மறந்தாச்சு மானங்கெட்டு போயாச்சு ஓட்டு கேக்கும் போது தான் மண்டியிட வந்தாச்சு. சலுகைகளை போட்டதால் சாதி பிறிவினைகளும் பிறந்தது இலவசத்தை தந்ததால் உழைப்பும் இழைப்பாறுது. வீட்டு நாட்டு பற்றிலே சுக துக்கம் தாக்குது நிம்மதியற்ற வாழ்வுமிங்கு மரணம் தேடி ஓடுது மரனபயம் ஒன்றினால் வாழ பற்று கொள்ளுது வாழ பற்று கொள்வதை வழக்கம் ஆக்க  பார்க்குது சாதிக்க துடிக்கிற சாமானியன் வாழ்விது.