" சாமானியனின்
மக்களையும் மறந்தாச்சு
மானங்கெட்டு போயாச்சு
ஓட்டு கேக்கும் போது தான்
மண்டியிட வந்தாச்சு.
சலுகைகளை போட்டதால்
சாதி பிறிவினைகளும் பிறந்தது
இலவசத்தை தந்ததால்
உழைப்பும் இழைப்பாறுது.
வீட்டு நாட்டு பற்றிலே
சுக துக்கம் தாக்குது
நிம்மதியற்ற வாழ்வுமிங்கு
மரணம் தேடி ஓடுது
மரனபயம் ஒன்றினால்
வாழ பற்று கொள்ளுது
வாழ பற்று கொள்வதை
வழக்கம் ஆக்க பார்க்குது
சாதிக்க துடிக்கிற
சாமானியன் வாழ்விது.
Comments