' விலாசமாகும் வியாபாரம் '
பால் குடிக்க தாய் இல்லை
பசி போக்க வழியில்லை
பாசப் போர் வலி தொல்லை
புரியும் திறன் கொண்டோ ரிங்கில்லை.
பணப் பேய் பெரும் நோயாகி
பணமெனும் மன நோய் தாக்கி
மதிப்புள்ள மனிதத்தை மதியடியாக்கி
மதிப்பற்ற காகிதம் காசாய் போனதால்
உன்னத வாழ்வும் நாசம் ஆகுதே.
குழந்தை விற்பனை வியாபாரமா
கூச்சல் கதறல்களதற்கு சேதாரமா
சிசு கொலையை மிஞ்சும் பயங்கரமா
இத் தரங்கெட்ட செயலினி நீங்கிடுமா?
Comments