Posts

Showing posts from February, 2020

மனிதம்

இருளோடு வாழ்வோர்க்கு அருளாய் ஒளி இருக்கட்டும் அறியாமை இருள் போக்க  கல்வியறிவால் அறம் செய்திட்டால் ஊராரும் உயர்ந்திடுவார் உடன் அவர் மனிதம் உயர்வடைய பசியோடு படுத்திங்கு வயிற்றோடு வாழ்பவர்க்கு நடுநிசியில் நாமெரியும் உணவதனை  அவர் உணர்வறிந்து உதவுகையில் உயிர் போகும் நிலைதனிலும் ஒரு பொழுதே செய்திடினும் உன் மனிதம் மறவாதே. எனதெனும் எண்ணமில்லாமல் தனதெனும் தற்புகழ் கொள்ளாமல் கொடை கொடுத்ததை குத்திக் காட்டாமல் மானங்காத்திட உடுக்கை கொடுத்திடினும் மனிதம் மானப்பெரிதாகும். இல்லாப் போதின் இருப்பெதுவோ அதுவும் இல்லாருக்கென எடுத்திறைக்க ஏதும் இல்லா தவன் ஆண்டி  அதனிலும் வள்ளல் அவந்தாண்டி இல்லா இறைவனும் இவன் தாண்டி. ஈரோடு தமிழின்பன் (எ) கௌசிக்ராமன் மயிலாடுதுறை

எனக்கு பிடித்த உறவு

சொந்தம் தாண்டி பந்தம் தாண்டி  சொர்க மாகிடும் உறவை தாண்டி பிரிவை தாண்டி உலக மாகிடும் காதல் தாண்டி கனவும் தாண்டி நிஜத்தில் நிலைத்திடும் வலியை தாண்டி வழியை காட்டி விழியு மாகிடும்  நன்மை தாண்டி தீமை தாண்டி உண்ம யாகிடும் ஆண்மை தாண்டி பெண்மை தாண்டி பேரின்ப மாகிடும் உதிர்ந்தாலும்  முதிர்ந்தாலும் துளிர்த்து பூத்திடும் இருப்பை தாண்டி இழப்பை தாண்டி இறுதி யாகிடும் நாளும் நாம் எனும் ஒற்றுமை மலர நட்பும் ஆகிடும்.  பாடம் கற்பிக்கா பந்தம் கற்பித்து பாசப் பறவைகளாய் ஒன்றாக பறந்திடவே நாளும் நாம் கழிக்கும்  களிப்பில் நட்பதுவே. ஈரோடு தமிழின்பன் (எ) கௌசிக்ராமன் மயிலாடுதுறை

அப்பா

அன்னைக்கு அவன் துணையாம் என்றைக்கும் எனக்கு உறுதுணையாம் பள்ளி சொல்லும் பாடமாம் பல்கலைக்  கழகமே இவராகுமாம்.  தளரா உளமடைந்து தரணியே இவனாகலாம் பல தடைதாண்டு மிவர் புகழுக்கு  பரணியே நாம் பாடலாம்.  அறிவே அறமென்றாகிட இவர் உறவே பெரும் வரமாகிடும் இவன் அறவே அழிவற்றவன் உறவினில் இவன் உற்றவன்.  தனக்காய் ஆசையற்றவன் பொருளுக்கும், பொருளுக்கும் பிறழா பொருளானவன் கானக் குழலில் காற்றானவன் இயற்கை எழிலில் அன்பூற்றானவன் ஆண்மை கடந்து ஆணானவன் தன் பெண்ணுக்கும் பொருட்டானவன்.  அறியா மக்கட்கு இருளானவன் பலர் உயர தானும்  மெழுகாய் உருகிக் கரைவானிவன் கரு சுமப்பின் கருவானவன் அவன் சிறப்பை இங்கே அறிவானெவன். 

வள்ளுவன்

ஏட்டை எடுத்து படித்தாலும்  எழுத்துகள் கருப்பாய் இருந்தாலும்  கருத்துகள் உயிர்ப்பு கொடுத்தாலும்  என்றும் பசுமை தானிதன் அடையாளம்.  எண்ணம் போல்வாழ் வென்பதனை எண்ணிய எண்ணியாங் கென்பதிலே என்றோ சொல்லிச் சென்றவரே பசுமை வாழ்வை வார்த்தையில் தந்தவரே. இல்லற நல்லற சொல்லறங்கள்  செயல் அறமாகிட துணையானார் அருட் பொருளின்றி இல்லையென்றார் அவ்வுலக இவ்வுலகம் ஆகிய  ஈருலகை  கரையா செல்வக் கல்வியினை கசடற கற்றதன்படி நிற்கசொல்லி  அன்பறனுடைத் தாய்க்கும் குறளாகி வள்ளுவர் என்றும் பசுமை நிறமானார்.

பயனற்ற பயண்பாடு

தொழிலுக் குதவா கல்வி  ஆயிரமிருந் தென்ன பயன்  கல்லா முன்னோர் கலையிங்கு வரலாறாய் நிலைப்பதி லென்ன பயன்.  எழில்மிகு இயற்கை அழகெல்லாம் எழுந்து நிற்கும் கட்டிடமா செடிமர கொடி தரும் கொடையிங்கு நாம் மறந்த மகத்துவ மருத்துவமா! உற்றார் உறவின ரோடு ஊரே கொண்டாடிடும் பண்டிகைகள் காணக் கிடைக்கா நிலைகண்டு  ஏங்கித் தவிக்கும் கண்மணிகள்.  உடல் இரத்த கண் தானங்செய்ய உறுப்புகள் நல்லா விளங்கிடனும் உறுப்பை சுறு சுறுப்பாக வைத்திடவே - மைதானம் சென்று பயிற்சிகள் செய்திடுவோம் தாகம் தீர்த்திடும் ஆறு - தான் ஓடி கடல்நீர் ஆகும் முன்னே மாயும் உயிர் பலநூறு - குடுவைக்குள்  அடைத்து விலையாகும் முன்னே.