மனிதம்

இருளோடு வாழ்வோர்க்கு
அருளாய் ஒளி இருக்கட்டும்
அறியாமை இருள் போக்க 
கல்வியறிவால் அறம் செய்திட்டால்
ஊராரும் உயர்ந்திடுவார்
உடன் அவர் மனிதம் உயர்வடைய

பசியோடு படுத்திங்கு
வயிற்றோடு வாழ்பவர்க்கு
நடுநிசியில் நாமெரியும் உணவதனை 
அவர் உணர்வறிந்து உதவுகையில்
உயிர் போகும் நிலைதனிலும்
ஒரு பொழுதே செய்திடினும்
உன் மனிதம் மறவாதே.

எனதெனும் எண்ணமில்லாமல்
தனதெனும் தற்புகழ் கொள்ளாமல்
கொடை கொடுத்ததை குத்திக் காட்டாமல்
மானங்காத்திட உடுக்கை கொடுத்திடினும்
மனிதம் மானப்பெரிதாகும்.

இல்லாப் போதின் இருப்பெதுவோ
அதுவும் இல்லாருக்கென எடுத்திறைக்க
ஏதும் இல்லா தவன் ஆண்டி 
அதனிலும் வள்ளல் அவந்தாண்டி
இல்லா இறைவனும் இவன் தாண்டி.

ஈரோடு தமிழின்பன் (எ) கௌசிக்ராமன் மயிலாடுதுறை

Comments

Popular posts from this blog

மனிதம் மலரட்டும்

உழவின் உயர்வு

' முற்காலம், இக்காலம், எக்காலம் நற்காலம் '

இதயம்

மனைவி

ஒழுக்கம்

சாதி...

பிள்ளை