வள்ளுவன்
ஏட்டை எடுத்து படித்தாலும்
எழுத்துகள் கருப்பாய் இருந்தாலும்
கருத்துகள் உயிர்ப்பு கொடுத்தாலும்
என்றும் பசுமை தானிதன் அடையாளம்.
எண்ணம் போல்வாழ் வென்பதனை
எண்ணிய எண்ணியாங் கென்பதிலே
என்றோ சொல்லிச் சென்றவரே
பசுமை வாழ்வை வார்த்தையில் தந்தவரே.
இல்லற நல்லற சொல்லறங்கள்
செயல் அறமாகிட துணையானார்
அருட் பொருளின்றி இல்லையென்றார்
அவ்வுலக இவ்வுலகம் ஆகிய ஈருலகை
கரையா செல்வக் கல்வியினை
கசடற கற்றதன்படி நிற்கசொல்லி
அன்பறனுடைத் தாய்க்கும் குறளாகி
வள்ளுவர் என்றும் பசுமை நிறமானார்.
Comments