எனக்கு பிடித்த உறவு
சொந்தம் தாண்டி
பந்தம் தாண்டி
சொர்க மாகிடும்
உறவை தாண்டி
பிரிவை தாண்டி
உலக மாகிடும்
காதல் தாண்டி
கனவும் தாண்டி
நிஜத்தில் நிலைத்திடும்
வலியை தாண்டி
வழியை காட்டி
விழியு மாகிடும்
நன்மை தாண்டி
தீமை தாண்டி
உண்ம யாகிடும்
ஆண்மை தாண்டி
பெண்மை தாண்டி
பேரின்ப மாகிடும்
உதிர்ந்தாலும்
முதிர்ந்தாலும்
துளிர்த்து பூத்திடும்
இருப்பை தாண்டி
இழப்பை தாண்டி
இறுதி யாகிடும்
நாளும் நாம் எனும்
ஒற்றுமை மலர
நட்பும் ஆகிடும்.
பாடம் கற்பிக்கா
பந்தம் கற்பித்து
பாசப் பறவைகளாய்
ஒன்றாக பறந்திடவே
நாளும் நாம் கழிக்கும்
களிப்பில் நட்பதுவே.
ஈரோடு தமிழின்பன் (எ) கௌசிக்ராமன் மயிலாடுதுறை
Comments