Posts

Showing posts from June, 2020

நிறமும் நிலவும்

மனதில் கரியமுடை மனிதர்கள் மகிழ்வுதரும் இனிமை இரவாகிடில், மனம் நிறம் பார்த்திடுமா நிறமென்பது நிலையல்ல நிறம் இங்கே நிறந்தரமல்ல. தோலின் நிறமது பிரிவின் வரவா, தொற்றாய் தோன்றிய பிறப்பின் உறவா ? நிலவின் மொழியில் நான் அழகா எனை அழகாக்க்கும்  இவ்விருள் அழகா ? சாதி மதமதன் சான்றுளதா ? வீதிச் சண்டைகளில் தானதன் தீர்வுளதா ? இருளோடும் வெண்மை ஈகையின் நிலையா ? அளவடங்கா அவனியில்  ஈகை நிலைக்க  அழிவும் வழித்துணையா ! ஏற்றம் இறக்கம் மதியின் விதியே , எல்லாம் எனதெனும் எண்ணம்  நமக்கு நாமே செய்யும் சதியே நிலவை நினைத்து  உவகை அடைவாய் , நன்கு உணர்ந்தால்  ஞாலம் அடைவாய் .

விடுதி ஓர் விடுகதை

விட்டுப் பிரியும் விதியாலே, மனம் மட்டும் தவிப்பது உறவாலே. காலம் கனவாய் மாறுதடா, நெஞ்சின் நினைவுகள் உறியடி ஆகுதடா. விடுமுறை தேடும் விடுகதையா, சிறைப்பறவை, சிறகு விரிக்கும் விடுதலையா. தொலைவில் தொலைந்து போனாலும், பேசிட, பேசியே பெரும் வரமாகும். சுமையான உறவுகள் கூட, சுகமாய் மாறும் தனிமையில் வாட. புது உறவுகள் நட்பால் நலமாகும், புன்சிரிப்பே நல்ல நினைவாகும் - தனிமை  திறமையை அறியும் தவமாகும் - இளமை  இனிமையின் பக்கத்  துணையாகும். உறவின், பிரிவே பெரும் துயர் நோயாக பிறக்கும், கனிவாய் காதல் மருந்தாக. அர்த்தமுள்ளது வாழ்க்கையென, பிரிந்து வாழ்க்கையில் புரிந்திடுமோ. விடுதி பயணத்தின் விடுதலையில், விடை பெற துடிக்கும் எண்ணத்தில், விடுதி, விடை பெறாமல் நினைவாகும். 

நிலவு

பொன் நிறமா வெந்நிறமா என் நிறத்தில் நீ இருப்பாய் கார் முகிலின் காயத்தில் கானமல் போகிறிருப்பாய்.  இமைக்கும் விழி காட்சிக்கு இறக்கும் வரை உறவாக இரவாளும் இவனிடம் தான்  இனிமைகள் இருக்கிறது.  தனிமை படுத்தி வாழ்கிறான் விண்மீன் கூட்டத்தை இவன் ஆள்கிறான் வான் கடலை நீந்திட பிறை வடிவ படகாகிறான். நிற வேற்றுமையில் ஒற்றுமையை இதனிடத்தில் காணலாம்  ஏற்றத்தாழ்வே வாழ்வு என்பதை இதன் கூற்றாய் உணரலாம்.