நிறமும் நிலவும்

மனதில் கரியமுடை மனிதர்கள்
மகிழ்வுதரும் இனிமை இரவாகிடில்,

மனம் நிறம் பார்த்திடுமா
நிறமென்பது நிலையல்ல
நிறம் இங்கே நிறந்தரமல்ல.

தோலின் நிறமது பிரிவின் வரவா,
தொற்றாய் தோன்றிய பிறப்பின் உறவா ?

நிலவின் மொழியில்
நான் அழகா
எனை அழகாக்க்கும் 
இவ்விருள் அழகா ?

சாதி மதமதன் சான்றுளதா ?
வீதிச் சண்டைகளில் தானதன் தீர்வுளதா ?

இருளோடும் வெண்மை ஈகையின்
நிலையா ?
அளவடங்கா அவனியில் 
ஈகை நிலைக்க 
அழிவும் வழித்துணையா !

ஏற்றம் இறக்கம் மதியின் விதியே ,
எல்லாம் எனதெனும் எண்ணம் 
நமக்கு நாமே செய்யும் சதியே

நிலவை நினைத்து 
உவகை அடைவாய் ,
நன்கு உணர்ந்தால் 
ஞாலம் அடைவாய் .

Comments

Unknown said…
👋👍👏👏👏👏👏👏

Popular posts from this blog

மனிதம் மலரட்டும்

உழவின் உயர்வு

மனைவி

அவளன்பழகன்

' முற்காலம், இக்காலம், எக்காலம் நற்காலம் '

இதயம்

விடுதலை பறவை

சுனிதா வில்லியம்ஸ்