நிலவு
பொன் நிறமா வெந்நிறமா
என் நிறத்தில் நீ இருப்பாய்
கார் முகிலின் காயத்தில்
கானமல் போகிறிருப்பாய்.
இமைக்கும் விழி காட்சிக்கு
இறக்கும் வரை உறவாக
இரவாளும் இவனிடம் தான்
இனிமைகள் இருக்கிறது.
தனிமை படுத்தி வாழ்கிறான்
விண்மீன் கூட்டத்தை இவன் ஆள்கிறான்
வான் கடலை நீந்திட
பிறை வடிவ படகாகிறான்.
நிற வேற்றுமையில் ஒற்றுமையை
இதனிடத்தில் காணலாம்
ஏற்றத்தாழ்வே வாழ்வு என்பதை
இதன் கூற்றாய் உணரலாம்.
Comments