விடுதி ஓர் விடுகதை
விட்டுப் பிரியும் விதியாலே,
மனம் மட்டும் தவிப்பது உறவாலே.
காலம் கனவாய் மாறுதடா,
நெஞ்சின் நினைவுகள் உறியடி ஆகுதடா.
விடுமுறை தேடும் விடுகதையா,
சிறைப்பறவை, சிறகு விரிக்கும் விடுதலையா.
தொலைவில் தொலைந்து போனாலும்,
பேசிட, பேசியே பெரும் வரமாகும்.
சுமையான உறவுகள் கூட,
சுகமாய் மாறும் தனிமையில் வாட.
புது உறவுகள் நட்பால் நலமாகும்,
புன்சிரிப்பே நல்ல நினைவாகும் - தனிமை
திறமையை அறியும் தவமாகும் - இளமை
இனிமையின் பக்கத் துணையாகும்.
உறவின், பிரிவே பெரும் துயர் நோயாக
பிறக்கும், கனிவாய் காதல் மருந்தாக.
அர்த்தமுள்ளது வாழ்க்கையென,
பிரிந்து வாழ்க்கையில் புரிந்திடுமோ.
விடுதி பயணத்தின் விடுதலையில்,
விடை பெற துடிக்கும் எண்ணத்தில்,
விடுதி, விடை பெறாமல் நினைவாகும்.
Comments