Posts

Showing posts from September, 2020

காதல் உலா

காலம் பதில் சொல்லும்  காதல் நீயானால் ஆயுள் பதில் சொல்லும்  அன்பே நீ ஆனால்.  வாழ்வே நீயானால் வானம் வாழ்த்து  சொல்லும்  வானின் வானவில்லும் என்னவளே உன்னைப் போல் எண்ணுகையில் இன்பந்தரும். எத்தனையோ பிறப்பெதர்கு என் துணை நீயானால் மதி மறைந்து போனாலும் உன் முகமே முழு மதிதான். நான் பித்தாகி அலைய என் சித்தத்தில் சிரிப்பவளே நான் மண்ணாகி போனாலும் நீ வித்தாகி விழுகையிலே மலை உயரமர மாகும் வரை மண்ணாகி உயிர் வாழ்ந்து  முதுகினிலே உனைசுமப்பேன்.  என்றும் அன்புடனே அதற்காக தவமிருப்பேன். 

ஆறறிவே ஓர் நாளுணர்வாய்

இதயங்களை இன்பத்தில் நனைத்தாய்  இரவுக்கும் இருளுருவம் கொடுத்தாய் இரவுக்குள் நிலவாய் ஒளித்து இதயத்தின் துடிப்பாய் நிலைத்தாய்.    முடிவான வாழ்க்கையின் எல்லை விடியாத இரவென்றும் இல்லை புரியாத புதிரால் தொல்லை விடை தெரிந்தாலது விதியே இல்லை. இலக்குகள் உள்ளவரை  இறுதியே இல்லை இங்கே இலக்குகள் இல்லை என்றால்  மரமும் வெற்றுரம் தானிங்கே. இருளுக்குள் விலங்காய் திரிந்தால் வெளிச்சத்தில் தடமாய் மாறும் பட்ட பாதத்தின் காயம் ஆரும் பலனாய் பலருக்கும் அது பாதையாகிட .   சருகாகி போனால்  கூட இலையாக மீண்டும் மாறும் விழுதாகி போனால் கூட  விதையாக பிறக்கக் கூடும். மண்ணாகி போனால் கூட மட் பாண்டத்தை ஓர் நாள்  சேரும் ஏதாவ தொன்றாகிடுவாய்  இருதியில் ஏதுமின்றித் தான் போகிடுவாய். ஆறறிவே நீயறிவாயோ இது சத்தியமென ஓர் நாளுணர்வாயோ.

சாதிக்கும் வரை வாழ்வார்

நெஞ்சத்தில் மெத்தையிட்ட  எத்தனையோ எண்ணமெல்லாம் பித்தனாகி திரிந்தவனை வித்தகனாய் மாற்றி விட்டு கற்றவனின் கல்வியெல்லாம்  காசாக மாறிடவே அறிவெல்லாம் விரிவு செய்து அநியாயம் செய்வதுண்டு ஊராரும் தூங்கிவிட மோகத்தால் கண் விழிக்க மதியிருந்தும் முட்டாளாய்  இருள் தேடி மடிந்திடுவான் விதிவிலக்காய் திகழ்பவரே வீதிக்கும்  விளக்காவார் நீதிக்கும் பொருளோடு சாதிக்கும் வரை வாழ்வார்.