காதல் உலா
காலம் பதில் சொல்லும்
காதல் நீயானால்
ஆயுள் பதில் சொல்லும்
அன்பே நீ ஆனால்.
வாழ்வே நீயானால்
வானம் வாழ்த்து சொல்லும்
வானின் வானவில்லும்
என்னவளே உன்னைப் போல்
எண்ணுகையில் இன்பந்தரும்.
எத்தனையோ பிறப்பெதர்கு
என் துணை நீயானால்
மதி மறைந்து போனாலும்
உன் முகமே முழு மதிதான்.
நான் பித்தாகி அலைய
என் சித்தத்தில் சிரிப்பவளே
நான் மண்ணாகி போனாலும்
நீ வித்தாகி விழுகையிலே
மலை உயரமர மாகும் வரை
மண்ணாகி உயிர் வாழ்ந்து
முதுகினிலே உனைசுமப்பேன்.
என்றும் அன்புடனே
அதற்காக தவமிருப்பேன்.
Comments